காசே தான் கடவுளப்பா

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: சக்கரம்

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ? - நீ
தேடும் போது வருவதுண்டோ - விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants