உன்னை நம்பி அவள் இருந்தாள்
திரைப்படம்: எங்கள் செல்வி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:
இசை:்
உன்னை நம்பி அவள் இருந்தாள் ஊரை நம்பி நீ இருந்தாய்கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள் ஊரை நம்பி நீ இருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள்
அன்பு மகள் முகம் பார்த்திருக்க அருகில் நீயும் காத்திருக்க
துன்பம் உன்னை சூழ்ந்திருக்க துன்பம் உன்னை சூழ்ந்திருக்க
துயரம் பரிசாய்த் தந்து விட்டாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள்
ஆசையோடே பாடி நின்றாள் ஆவலாலே வாடி நொந்தாள்
பாசமும் நேசமும் கிடைக்கவில்லை பாசமும் நேசமும் கிடைக்கவில்லை
பறந்து சென்றே அவள் மறைந்து விடாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள்
காலை மாலை இரவெல்லாம் வேலை என்றே நீ இருந்தாய்
நாளை எண்ணி அவள் இருந்தாள் நாளை எண்ணி அவள் இருந்தாள்
வேளை வந்தது சென்று விட்டாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள் ஊரை நம்பி நீ இருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய் மண்ணை நம்பி சரணடைந்தாள்
உன்னை நம்பி அவள் இருந்தாள்
|
