உடலுக்கு உயிர் காவல்
திரைப்படம்: மணப் பந்தல்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:்
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
கண்ணுக்கு இமை காவல்
மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்து விட்டால் பின் யார் காவல்
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
சட்டம் என்பது வெளிக் காவல்
தர்மம் என்றால் அது மனக்காவல்
இரண்டும் போன பின் எது காவல்?
எது காவல்? யார் காவல்? எது காவல்?
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்?
காவல் காவல் ஆ..
காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? அவள்
மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்? யார் காவல்?
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
உடலுக்கு உயிர் காவல்
|
