துள்ளித் திரிந்த பெண்ணொன்று
திரைப்படம்: காத்திருந்த கண்கள்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:்
துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்றுதுள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளி ஒன்று பேச மறந்ததேன் இன்று
துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று
வெள்ளி வடிவ முகம் ஒன்று வெட்கம் கொண்டேதேன் இன்று

வேலில் வடித்த விழி ஒன்று மூடி கொண்டதேன் இன்று
வேலில் வடித்த விழி ஒன்று மூடி கொண்டதேன் இன்று
துள்ளித் திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேன் இன்று
அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகையெங்கே

சொல்லி வைத்து வந்தது போல் சொக்க வைக்கும் மொழி எங்கே?
ஆசை நெஞ்சில் இருந்தாலும் அமைதி கொள்ளும் குணம் ஏனோ?
அன்னை தந்த சீதனமோ என்னை வெல்லும் நாடகமோ?

|