பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாட
திரைப்படம்: தாயின் கருணை
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:
இசை:்
பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாடசான்றோர்கள் மடி தன்னில் விளையாடும் தமிழ் வாழ்க
பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாட
அறிவான முப்பாலும் கனி கொடுக்க
திருவாசகம் வந்து பனி தெளிக்க
அறிவான முப்பாலும் கனி கொடுக்க
திருவாசகம் வந்து பனி தெளிக்க
கொடி போன்ற இளம் பெண்கள் கற்பினிலே
கொலுக் கொண்டு முதிராத தமிழ் வாழ்கவே
பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில் விளையாடும் தமிழ் வாழ்க
வேல் தேடி எரிகின்ற வீரமுண்டு
நூல் தேடித் தருகின்ற ஞானமுண்டு
வேல் தேடி எரிகின்ற வீரமுண்டு
நூல் தேடித் தருகின்ற ஞானமுண்டு
சூல் கொண்ட குலமங்கை திருமுகம் போல்
சுடர்கின்ற புது மஞ்சள் தமிழ் வாழ்கவே
பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாட
சான்றோர்கள் மடி தன்னில் விளையாடும் தமிழ் வாழ்க
பூந்தென்றல் இசைபாட புகழ் பாணர் கவி பாட
|
