அவள் பறந்து போனாளே

திரைப்படம்: பார் மகளே பார்

பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ், T.M. சௌந்தரராஜன்

இயற்றியவர்:

இசை:்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவியில்லை
என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவியில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை என் நினைவுக்கும் உறக்கமில்லை
என் நினைவுக்கும் உறக்கமில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்குக் குயிலில்லை
இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்குக் குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டி வைத்தேன் அதில் எனையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே தன் சிறகை விரித்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

அவள் எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகனானேன்
அவள் எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா என் உயிரை எடுத்துக் கொண்டாள்

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரண்டைக் கவர்ந்து போனாளே

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே

Designed and maintained by AKR Consultants