என்னைப் பார்த்தா பரிகாசம்

திரைப்படம்: செங்கமலத் தீவு

பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்:

இசை:்

என்னைப் பார்த்தா பரிகாசம் எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தால் உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம் எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்

திருமணம் முடிந்து விட்டால் குடும்ப தண்டனை
பொருளைத் தேட நினைக்கும் போது அலையும் தண்டனை
வரவும் செலவும் மீறினாலே வாழ்க்கை தண்டனை
வையகத்தில் பொய்யும் மெய்யும் மோதும் தண்டனை

என்னைப் பார்த்தா பரிகாசம் எனக்குத் தானா சிறைவாசம்?
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதி இல்லை
கள்ளனாக மாறினாலும் கண்டது தொல்லை
அல்லும் பகலும் பாடுபட்டும் ஆறுதல் இல்லை
சொல்லப் போனால் துன்பம் தானே மனிதனின் எல்லை

என்னைப் பார்த்தா பரிகாசம் எனக்குத் தானா சிறைவாசம்
எண்ணிப் பார்த்தா உறவாடும் மனிதன் வாழ்வே சிறைவாசம்
என்னைப் பார்த்தா பரிகாசம்

Get this widget | Track details | eSnips Social DNA

Designed and maintained by AKR Consultants