பஆசை வைத்தால் அது மோசம்

திரைப்படம்: தென்றல் வீசும்

பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்:

இசை:்


அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன?

அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

விளையாடும் காலோ கவி பாடும் நாவோ
செண்டாடும் கொடியோ நின்றாடும் ஒளியோ
அவள் தந்த பாடல் நான் பாடுகின்றேன்
என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்

அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே

உனக்காக அழுதாள் எனக்காக சிரித்தாள்
விழி போன பின்னால் வழியாக நின்றாள்
கண்ணாக நீயும் கரையாகத் தாயும்
இருக்கின்ற போது ஏனிந்த விழிகள்?

அழகான மலரே அறிவான பொருளே
தெளிவான தெளிவே செஞ்சாந்து மணமே
உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்
என் கண்ணில் மகளே நீ கண்டதென்ன?

ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ ம்..ஹ்ம்..ம்..

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants