பஆசை வைத்தால் அது மோசம்

திரைப்படம்: தங்க மலர்

பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்:

இசை:்


ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம்
ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம்

பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள்
பெற்றவள் போனாள் மற்றவள் வந்தாள்
பேணி வளர்த்தாள் மறைந்து விட்டாள் - இதில்
சுற்றமென்று ஒரு தோகை வந்தாள் - இதில்
சுற்றமென்று ஒரு தோகை வந்தாள் - அவள்
சொந்தம் மறந்து பிரிந்து விட்டாள்

ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம்

அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள்
அன்னையின் கையில் கன்னியின் மடியில்
ஆடுவதெல்லாம் சில நாள் - இதில்
கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் - இதில்
கண்ணீர் சில நாள் புன்னகை சில நாள் காதல் நாடகம் சில நாள்

ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாபம்
பழகிப் பிரிவது துயரம்

நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கின்றேன்
நினைவில் நிற்கும் உறவினை எல்லாம்
மறந்திடத் துடிக்கின்றேன் - மன
நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி - மன
நிம்மதி கிடைக்கும் உலகினை நோக்கி
பறந்திடத் துடிக்கின்றேன்

ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாபம்
பழகிப் பிரிவது துயரம்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants