என்தன் பருவத்தின் கேள்விக்கு - திரைப்படம்: சுமைதாங்கி

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:்

ராதா ராதா ராதாராதாராதா ராஜா ராஜா ஓ ராஜா
என்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
உன்தன் பார்வைக்குப் பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஆ ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும் மொழியென்ன சொல்லடி ராதா - அது
ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா - இரு
கரங்களைப் பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா - அதில்
காந்தத்தைப் போல் ஒரு உணர்ச்சி உண்டாலது ராஜா ராஜா

என்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
உன்தன் பார்வைக்குப் பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

நெஞ்சில் இருவரும் இணைந்தபின் திருமணம் ஏனடி ராதா? அது
இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா - முதல்
இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா ராதா - அது
உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

என்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா
உன்தன் பார்வைக்குப் பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா

கேட்க: என்தன் பருவத்தின் கேள்விக்கு

Designed and maintained by AKR Consultants