மௌனமே பார்வையால்

திரைப்படம்: கொடிமலர்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:்

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும் தேன்
ஆறு போலப் பொங்கி வரவேண்டும்
அங்கம் தழுவும் வண்ண தங்க நகைபோல் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் - என்னை
அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால் வே
றென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல
மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

Get this widget | Track details | eSnips Social DNA

கேட்க: மௌனமே பார்வையால்

Designed and maintained by AKR Consultants