நாளாம் நாளாம் திருநாளாம் - திரைப்படம்: காதலிக்க நேரமில்லை
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:்
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
நாளாம் நாளாம் திருநாளாம்
மணமகன் இந்த ஊஞ்சலில் மணமகள் மன்னம் மார்பினில் - அங்கு
ஆடும் நாடகம் ஆயிரம் அது காதல் தேவனின் காவியம் - அதில்
ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம் இருவர் ஊடலே பாடலாம்
ஓஹோஹோ ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..
நாளாம் நாளாம் திருநாளாம்
இளமையின் இந்த ரகசியம் இயற்கையில் வந்த அதிசயம் - இதை
வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம் அதில் நாமும் இன்னொரு காவியம் - இந்த
இளமை போகலாம் முதுமை சேரலாம் இருவர் காதலும் மாறுமோ?
ஓஹோஹோ ஓஹோஹோ ஆஹஹா ஆ.ஆ..ஆ. ஆ..
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
இளைய காதலர் மேகங்கள் என்னும் இந்திரன் தேரில் வருவாளாம்
நாளாம் நாளாம் திருநாளாம்
கேட்க:
நாளாம் நாளாம் திருநாளாம்
