காத்திருந்த கண்களே - திரைப்படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை:்
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமேஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன? - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன?
மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன? - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
த்லைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? - இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன?
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன? - என்னை
அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?
லால்ல லாலா லாலாலா லாலலல்லா லாலாலா
லால லாலா லாலாலா லாலலாலா லாலலா
கேட்க:
காத்திருந்த கண்களே