நீ போகும் இடமெல்லாம் - திரைப்படம்: இதயக் கமலம்

பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை:்

போ போ போ.. வா வா வா...

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ போபோபோ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா

பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் - நீ
பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்
உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம் வா வா வா

போ போ போ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா

காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் எனையே காணலாம்
காலம் உன்னிடம் ஆடலாம் கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம் மனதில் எனையே காணலாம் போ போ போ

பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னைத் தந்தேன் உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம் பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம் என்னைத் தந்தேன் உன்னிடம் வா வா வா

போ போ போ நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வாவாவா
ஆஹாஹா ஆ.. ஓஹோஹோ ஓ.. ஆஹாஹா..

கேட்க: நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்

Designed and maintained by AKR Consultants