Singers: D.K. Pattammal - பாடியவர்: டி.கே. பட்டம்மாள்
Lyrics: Desika vinayagam pillai - இயற்றியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
Raga: Ragamalika
ராகம்: ராகமாலிகை
வேலன் வருவாரடி வேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி
வள்ளிமேல் மோகம் கொண்டு வேடனான வடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி
மானோடி வந்ததனால்
மானோடி வந்ததனால் நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததனால் நானோடி வந்தேனென்று
மானோடி வந்ததனால் நானோடி வந்தேனென்று
வானோங்கும் தினையின் மன்மதனார் மலைத்த
வேலன் வருவாரடி
மங்கை மனதறிந்து
மங்கை மனதறிந்து எங்கும் தொடர்ந்தலைந்து
மங்கை மனதறிந்து எங்கும் தொடர்ந்தலைந்து
வேங்கை மரமாகி ஓங்கி வளர்ந்த வடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
பண்டாரமாய் சிவனை கொண்டாடியே
பண்டாரமாய் சிவனை கொண்டாடியே
பண்டாரமாய் சிவனை கொண்டாடியே அமுது
உண்டோடி அமுது
உண்டோடி என்றோடி மன்றாடி நின்றவடி
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி
வேலன் வருவாரடி
தேனும் தினைமாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு
தேனும் தினைமாவுண்டு தாங்காத விக்கல் கொண்டு
கூனும் நிமிர்ந்து கொண்டு காவி உடுத்தவடி
வேலன் வருவாரடி
வஞ்சியரின் கைபிடித்து குளக்கரையில்
வஞ்சியரின் கைபிடித்து கெஞ்சிக் கரையேறி
வஞ்சியரின் கைபிடித்து கெஞ்சிக் கரையேறி
கொஞ்சுமொழி நங்கையுடன் இன்சொல் புரிந்த
வேலன் வருவாரடி
அண்ணனருளால் குறப் பெண்ணை மணக்கவென்று
அண்ணனருளால் குறப் பெண்ணை மணக்கவென்று
எண்ணித்துதித்த திருக்கண்ணன் கொண்டாடும்
வேலன் வருவாரடி
யானை மருட்டி வினை காலில் விரட்ட
யானை மருட்டி வினை காலில் விரட்ட
யானை மருட்டி வினை காலில் விரட்ட
மடமானை மகிழ்ச்சியொடு மார்போடணைத்த வடி
வேலன் வருவாரடி
நம்பியவர் துதிக்க..
நம்பியவர் துதிக்க நாரதர் ஆனந்திக்க
நம்பியவர் துதிக்க நாரதர் ஆனந்திக்க
தம்பிக்குகந்த மயிலாடப் பணியாற்றும்
வேலன் வருவாரடி வடிவேலன் வருவாரடி
வேலன் வருவாரடி வருவாரடி வருவாரடி
